சிவாயநம..
அன்புடையீர்..வணக்கம்.நமது பூத்தொண்டு அறக்கட்டளை எல்லாம் வல்ல தில்லைக்கூத்தனின் அருளோடும் நமது அருட்குருநாதர் பஞ்சாட்சர சித்தர் எனும் சிவ. ராமகிருஷ்ணன் ஐயா அவர்களின் நல்லாசியுடனும் முதன் முதலாக திருவையாறு ஐயாறப்பர் ஆடி அம்மாவாசை அப்பர் கைலாயக்காட்சிக்கு பூத்தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.
நமது தருமை ஆதீனம் 27வது நட்சத்திரகுருமணிகள் தம்பிரான் சுவாமியாக திருச்சி மௌன மடத்தில் இருந்தபோது, கடந்த 28.09.2013 தினத்தன்றுதிண்டுக்கல் அபிராமிஅம்மன் கோவிலில் 63நாயன்மார்களுக்கு எல்லாம்வல்ல சிவபெருமான் திருகைலாயக்காட்சி நல்கும் விழாவிற்கு வருகைதந்து சிறப்பித்தார்கள்.
மேலும் திருவையாறு அப்பர் கைலாயக்காட்சிக்கு பூத்தொண்டு செய்யுமாறு அப்போது கேட்டுக்கொண்டதற்கிணங்க 26.07.2014அன்று முதன்முதலாக திருவையாறு ஐயாறப்பர் ஆடிஅமாவாசை அப்பர் கைலாயக்காட்சிக்கு பூத்தொண்டு செய்யும் பேறுபெற்றோம். அதன் பின்பு திருப்பழனம் வழிபாட்டிற்கு செல்லும்போது கோவில் மிகவும் பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருந்தது இதைக்கண்டு என் உள்ளம் மிகுந்த வேதனையுற்றது. இத்திருத்தலத்திற்கு எப்படியாவது உழவாரப்பணி செய்திடவேண்டும் என்று எண்ணி திண்டுக்கல் மாவட்ட சிவனடியார்கள் திருக்கூட்டம் வாயிலாக உழவாரப்பணி வெகுசிறப்பாக செய்யப்பெற்றது.இத்திருத்தலத்தில் குபேரதீர்த்தகிணறு பாழைடைந்து காணப்பட்டது. அக்கிணறை சுவாமிக்கு அபிஷேகதீர்த்தம் எடுக்க ஏதுவாக தூர்வாரியது மறக்கமுடியாதது. அன்றிலிருந்து இன்றுவரை ஆடி அமாவாசை அன்று திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை தொடர்ந்து செய்யப்பட்டுவருகிறது.
பிரதோஷ தினத்தன்று சுவாமிக்கு அபிஷேக பொருட்கள் மற்றும் மாலை இன்றி இருந்தது. இப்படி பழமையான தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் எத்தனை இருக்குமோ என்று எண்ணி வேதனையுற்றேன்.
சிவ வழிபாட்டிற்கு இன்றியமையாதது பூவும் நீரும். பூத்தொண்டே.. நாயன்மார்கள் தொண்டு. இப்பூத்தொண்டை தங்குதடையின்றி செய்ய ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி அடியார்பெருமக்கள்,அன்பர்பெருமக்களின் ஒத்துழைப்புடன் இப்பூத்தொண்டை செவ்வனே செய்யவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது.
அதன்படி 27.09.2021அன்று நமது பூத்தொண்டு அமைப்பை "தேவாரத் திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை"என்று முறைப்படி பதிவுசெய்யப்பட்டது. பதிவு எண் : 40/2021
04.10.2021 அன்றுமுதல் தேர்தெடுக்கப்பெற்ற தேவாரத்திருத்தலங்களுக்கு ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் பூ, மாலை, அபிஷேகப்பொருட்கள் தவறாமல் நேரடியாகச்சென்று வழங்கப்படுகிறது. இப்பூத்தொண்டிற்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவரது தாழையும் சிரமேல்வைத்து வணங்குகிறேன்.
#புண்ணியம் செய்வார்க்கு பூ உண்டு, நீர் உண்டு " என்பார் திருமூலர்.பாடல்:
புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு1
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றாரே.
-திருமூலர்.
"இப்பிறவி தப்பினால்.. எப்பிறவி வாய்க்குமோ.."தாயுமானவர்
-நன்றி-
பூத்தொண்டே..! நாயன்மார்கள் தொண்டு..!
இவண்
பூத்தொண்டு சிவ. தென்தில்லை செந்தில்குமார் திண்டுக்கல்.
Contact: 9677774925
0
0
கோயில்களின் பட்டியல்
1. ஆபத்சஹாயேஸ்வரர் திருக்கோயில்
2. ஐராவதேஸ்வரர் திருக்கோயில்
3. அமிர்தகடேஸ்வரர் கோயில் (8வது அட்டவீரட்ட தலம் )
4. பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் (1வது அட்டவீரட்ட தலம் )
5. ஐயாறப்பர் திருக்கோயில்
6. கோளிலிநாதர் கோயில் (திருக்குவளை)
7. குற்றம் பொருந்த நாதர் திருக்கோயில்
8. லட்சுமிபுரிஸ்வரர் திருக்கோயில்
9. மங்களநாதர் திருக்கோயில் (மரகத நடராஜர் கோயில் )
10. முல்லைவன நாதர் திருக்கோயில் (தென்திருமுல்லைவாசல் )
11. சட்டைநாதர் திருக்கோயில் (திருக்காழி )
12. சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் (திருத்தினைநகர்)
13. தஞ்சை பெருவுடையார் கோயில்
14. வைத்தியநாதர் திருக்கோயில் (திருப்புள்ளிருக்குவேளூர் )
15. வீரட்டேஸ்வரர் கோயில் (4வது அட்டவீரட்ட தலம்) திருப்பறியலூர்
16. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (6வது அட்டவீரட்டதலம் )
17. வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (7வது அட்டவீரட்ட தலம் ) திருக்குறுக்கை
அறிவிப்புகள்
🛕 கோயில்
சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில் (திருத்தினைநகர்)
இடம்
தீர்த்தனகிரி
விழா
கும்பாபிஷேகம்
தேதி
08 Feb 2026
நன்கொடையிட
தேவார திருத்தல பூத்தொண்டு அறக்கட்டளை