உழவாரப்பணி

உழவாரத் திருப்பணியின் மகிமை அறிவோம். உழவாரம் செய்வோம்.

உழவாரப்பணி செய்த முக்கிய நாயன்மார் திருநாவுக்கரசர் ஆவார். இவர் சிவ ஆலயங்களைத் தூய்மை செய்யும் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் மற்றும் உழவாரக் கருவியைக் கொண்டு இந்தத் தொண்டினைச் செய்தார். இதைவிடச் சிறந்த புண்ணியம் வேறில்லை. கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவதை விட மேலான புண்ணியத்தை உழவாரப்பணி தரும்.

உழவார பணி என்றால் என்ன?

ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி எனப்படும்.

அவையாவன:
  • சிதிலம் அடைந்த கோவிலை சுத்தம்செய்து வழிப்பாட்டிற்கு கொண்டுவருதல்.
  • பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை சுத்தம்செய்தல்.
  • திருக்கோவில் தூண்களில் கொட்டும் திருநீறு குங்குமம் போன்றவற்றை சுத்தம் செய்வது.
  • இறைவனுக்கு சாற்றப்படும் நிர்மால்ய பூக்களை எடுத்து நந்தவனத்தில் போடும் பணி.
  • திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது..
  • சுவாமியின் ஆடைகளை துவைப்பது.
  • அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.
  • நந்தவனத்தை தூய்மைபடுத்துவது.
  • திருக்கோயிலை தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்துவது.
  • கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.
  • சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.
  • அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு, தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.
  • திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.
  • வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.
  • திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.
  • கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.
  • கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..
  • கோவில் சுற்றுச்சுவர் அல்லது மதில் சுவரை, சுத்தம் செய்து வெள்ளை அடிப்பது போன்ற திருக்கோவில் சார்ந்த பணிகளே உழவாரப் பணி ஆகும்.

இப்பணிகளை குறைந்தது மாதம் ஒரு நாள் செய்வோமானால் உடலும், மனதும் வலிமை பெறும்.

உழவாரம் செய்வீர்! இறையருள் பெறுவீர்!

  • அடுத்த முறை உங்கள் அருகில் ஏதாவது உழவாரப்பணி நடைப்பெற்றால், தவறாமல் கலந்து கொண்டு இறைவனாரின் அருளைப் பெறுங்கள்!!!
  • உடல்நலக்குறைவு உள்ளவர்கள் உழவாரப்பணி நடக்கும் இடத்தில் பணியில் உள்ளவர்களுக்கு குடிக்க தண்ணீர் மற்றும் வெயில் காலத்தில் நீர் மோர் குடுக்கலாம். உணவு பரிமாறலாம். இன்னும் பணபலம் உள்ளவர்கள் மதிய உணவு போன்றவற்றை உங்களது செலவில் குடுக்கலாம்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
மொத்த உழவாரப்பணி சேவைகள்

0

மொத்த உழவாரப்பணி செலவு

950

அறிவிப்புகள்

தரவு கிடைக்கவில்லை